கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகள்: ஐ.சி.எம்.ஆர். விளக்கம்
கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா பரிசோதனைக்காக பல்வேறு மாநிலங்களில் விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்தும்போது முரண்பாடான முடிவுகள் வந்த நிலையில் 2 நாட்களுக்கு மட்டும் விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கவுன்சில் விரைவு பரிசோதனைக் கருவிகள் குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, கரோனா தொற்றை கண்காணிக்க மட்டுமே மாநில அரசுகள் விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். மாறாக கரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். டெஸ்ட் அவசியம் என்று கூறியுள்ளது.
Advertisement