முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மரணம்?

இந்தியாவில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார்.  இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது.

Updated On : 11 மார்ச், 2020 at 1:24 PM
பகிர்:


ஹைதராபாத்: இந்தியாவில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார்.  இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் இதுவரை 62 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதித்த முதியவர் கர்நாடகத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.