முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 12 மார்ச், 2020 at 12:46 PM
பகிர்:

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3,169 ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 80,788 ஆக அதிகரித்துள்ளது. சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.