முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 46,711; பலி 1,583 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 5 மே, 2020 at 5:57 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13,161 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 14,541 பேரும்,  குஜராத்தில் 5,804 பேரும், தில்லியில் 4,898 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,049 பேரும், ராஜஸ்தானில் 3,061 பேரும், தமிழகத்தில் 3,550 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

கடந்த சில தினங்களாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.