தில்லியில் புதிதாக 1,947 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,947 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,947 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 1,947 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,92,560 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,588 பேர் குணமடைந்துள்ளனர், 32 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 2,63,938 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,542 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 23,080 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement