அழகு நிலையம், விடுதிகள் செயல்பட கேரள அரசு அனுமதி
கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அழகு நிலையம், விடுதிகள் மீண்டும் செயல்பட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அழகு நிலையம், விடுதிகள் மீண்டும் செயல்பட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அழகு நிலையங்கள், விடுதிகள் செயல்பட கடந்த ஒரு மாதமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
கேரளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அப்பகுதிகளிலுள்ள அழகு நிலையங்கள் மற்றும் ஆயுர்வேத விடுதிகளுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே இது குறித்து பேசிய கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அழகு நிலையங்களையும், ஆயுர்வேத முறையிலான தங்கும் விடுதிகளையும் மீண்டும் திறக்க அனுமயளித்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், தூய்மை மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கேரளத்தில் நேற்று (ஜன. 8) மட்டும் புதிதாக 5,142 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் பலியாகினர். இதனால் மொத்த உயிரிழப்பு 3,257-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 8,01,075 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.