முகப்பு
இந்தியா

திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை: ராகுல் காந்தி கண்டனம்

திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
ராகுல் காந்தி
பகிர்:

திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் வீடு, ஸ்டாலின் மருமகனின் நண்பர் ஜி ஸ்கொயர் பாலாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தோல்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம், எதிர்க்கட்சியை பாஜக சமாளிக்கும் வழிமுறையே வருமான வரிசோதனை. எனப் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →