செய்முறை தேர்வெழுதாத 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ 
இந்தியா

செய்முறை தேர்வெழுதாத 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ

கரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11-ஆம் தேதிக்குள் மறு தேர்வு நடத்துமாறு சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

DIN


கரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11-ஆம் தேதிக்குள் மறு தேர்வு நடத்துமாறு சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், கடந்த மார்ச் மாதம் செய்முறைத் தேர்வின் போது தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ கரோனா பாதித்து, தேர்வில் பங்கேற்க முடியாத மாணவ, மாணவிகள் யாரேனும் இருப்பார்கள் என்றால், அவர்களுக்கு மட்டும் வரும் ஜூன் 11-ஆம் தேதிக்குள் பள்ளிகள் செய்முறை மறுதேர்வு நடத்தலாம் என்று சிபிஎஸ்இ தேர்வு கடுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே - ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT