முகப்பு
இந்தியா

பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம்: 4 பேர் பணியிடை நீக்கம்

அசாம் மாநிலத்தில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் தலைமை அதிகாரி உள்பட 4 பேரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
கோப்புப்படம்
பகிர்:


அசாம் மாநிலத்தில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் தலைமை அதிகாரி உள்பட 4 பேரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.1) நடைபெற்றது. 

வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு பதர்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவர் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்து செல்வது  போன்ற ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்ட 149-வது வாக்குச்சாவடி தலைமை அதிகாரி உள்பட மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, தேர்தல் ஆணையம் அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

வாக்குப்பதிவு இயந்திரங்களின் முத்திரைகள் பிரிக்கப்படாமல் இருந்தாலும், 149-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அம்மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →