மாவோயிஸ்டுகளுடன் மோதல்: பாதுகாப்புப் படையினர் 5 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட எதிர்பாராத தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.