பரூக் அப்துல்லா கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது மகன் உமர் அப்துல்லா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனது தந்தை மருத்துவர்களின் ஆலோசனையின்படி தற்போது ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
கடந்த 30-ம் தேதி கரோனா தொற்று பாதித்த ஃபரூக் அப்துல்லா, ஆரம்பத்தில் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் இருந்தார். மருத்துவர்கள் அவரை மருத்துவ பராமரிப்புக்காக மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல தலைவர்கள் அவர் விரைவில் குணமடையப் பிராத்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஃபரூக் அப்துல்லா தனது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை மார்ச் 2-ஆம் தேதி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.