முகப்பு
இந்தியா

குருகிராமில் பயங்கர தீ விபத்து: 700 குடிசைகள் எரிந்து நாசம்

குருகிராமின் நாதுபூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 3 ஏப்ரல், 2021 at 2:04 PM
குருகிராமில் பயங்கர தீ விபத்து: 700 குடிசைகள் எரிந்து நாசம்
பகிர்:

குருகிராமின் நாதுபூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்றிரவு சட்டவிரோத மின்சாரத்தினால் மின்கசிவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அங்குள்ள 700 குடிசைகளில் 500 குடிசைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

தீயணைப்புத் துறையினர் சுமார் ஐந்து மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர். பின்னர் தீயணைப்புப் பணியாளர்கள் குடிசைகளில் வசிப்போரை மீட்டு வெளியேற்றினர். 

Advertisement

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் பதிவாகவில்லை.

இதுகுறித்து உதவி கோட்ட தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி காஷ்யப் கூறுகையில், சுமார் 15 தீயணைப்பு டெண்டர்கள் அந்த இடத்தை அடைந்து ஐந்து மணி நேரத்தில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தன என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.