முகப்பு
இந்தியா

புணே மாவட்ட தகவல் அதிகாரி கரோனாவுக்கு பலி

புணே மாவட்ட தகவல் அதிகாரி ராஜேந்திர சராக் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சசூன் பொது மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்ததாக மூத்த அதிகாரி தெரிவித்தார். 

Updated On : 3 ஏப்ரல், 2021 at 12:34 PM
புணேவில் மாவட்ட தகவல் அதிகாரி கரோனாவுக்கு பலி
பகிர்:

புணே மாவட்ட தகவல் அதிகாரி ராஜேந்திர சராக் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சசூன் பொது மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்ததாக மூத்த அதிகாரி தெரிவித்தார். 

அவருக்கு வயது 54. சராக் சமீபத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.

மகாராஷ்டிரா அரசு அதிகாரி சராக், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தகவல் அலுவலகங்களில் பணியாற்றியிருந்தார்.

Advertisement

இதுகுறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், 

கரோனா தொற்று காரணமாக ராஜேந்திர சராக் இறந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

கடந்த சில நாள்களாக, சாசன் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. நல்ல அதிகாரியை நாங்கள் இழந்திருப்பது வேதனையளிக்கிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.