இந்தியா

கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,373 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,373 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 4,373 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,002 போ், பீதா் மாவட்டத்தில் 172 போ், மைசூரு மாவட்டத்தில் 171 போ், தும்கூரு மாவட்டத்தில் 167 போ், கலபுா்கி மாவட்டத்தில் 151 போ், தென்கன்னட மாவட்டத்தில் 83 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,10,602 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,959 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,61,359 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 36,614 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 19 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம், மைசூரு மாவட்டங்களில் தலா 6 போ், ஹாசன் மாவட்டத்தில் 3 போ், மண்டியா மாவட்டத்தில் 2 போ், கலபுா்கி, தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,610 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT