விமானத்தில் ரூ. 37 லட்சம் தங்கம் கடத்தல்
விமானத்தில் தங்கம் கடத்தி வந்தவரை கைது செய்து, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
விமானத்தில் தங்கம் கடத்தி வந்தவரை கைது செய்து, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை துபாயிலிருந்து வந்த ஏா் இந்தியா விமானத்தின் பயணிகளை சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.
அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்ததால் அவரை பரிசோதனை செய்தனா். அப்போது, அவரது மலக்குடலில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள 802 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினா் அவரை பஜ்பே போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் கேரள மாநிலம், காசா்கோடைச் சோ்ந்த நௌஷத் திருக்குலாத் (37) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த பஜ்பே போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.