மும்பையில் ஒரேநாளில் 11 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
மும்பையில் மட்டும் புதிதாக 11,163 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
மும்பையில் மட்டும் புதிதாக 11,163 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இதனால், வார இறுதி நாள்களில் அங்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 11,163 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,52,445 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் 5,263 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 3,71,628 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,776 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 68,052 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.