முகப்பு
இந்தியா

ம.பி.யில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். 

Updated On : 5 ஏப்ரல், 2021 at 1:13 PM
ம.பி.யில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய் இன்று தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதுள்ள மூதாட்டி முதல்முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். 

Advertisement

இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், 

நான் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். என்னைப்போன்று  அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதனால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. 

மூதாட்டி 1903 ஜனவரி 1-இல் பிறந்துள்ளார். ஆதார் அட்டையின்படி சதர்பூர் கிராமத்தில் வசிப்பர் என்றும் மருத்துவர் பூபேந்திர குர்மி தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால், கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.