முகப்பு
இந்தியா

இமாசல்: எலைட் பள்ளியில் 99 மாணவர்கள், 23 ஊழியர்களுக்கு கரோனா

இமாசல பிரதேசத்தின் டல்ஹௌசி ரிசார்ட்டில் எலைட் குடியிருப்பு பொதுப் பள்ளியில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 5 ஏப்ரல், 2021 at 2:59 PM
இமாசல்: எலைட் பள்ளியில் 99 மாணவர்கள், 23 ஊழியர்களுக்கு கரோனா
பகிர்:

இமாசல பிரதேசத்தின் டல்ஹௌசி ரிசார்ட்டில் எலைட் குடியிருப்பு பொதுப் பள்ளியில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக துணை ஆணையர்  டி.சி.ராணா கூறுகையில், 

பள்ளியில் கரோனா பாதித்த அனைவரும் எந்தவித அறிகுறியும் இல்லை. தொற்று பாதித்த அனைவரும் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக் குழு அவர்களின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Advertisement

1970ஆம் ஆண்டில் இந்த பள்ளி தொடங்கப்பட்டது. கரோனா வைரஸ் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏற்கெனவே மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 
எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து செல்வதாலும், குடியிருப்பு வசதி கொண்ட கல்வி நிறுவனங்கள் திறந்துள்ளதாலும் கரோனா தொற்று மீண்டும் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.