முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இனறு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
கரோனா தடுப்பூசி செலுத்தும் மூன்றாவது கட்டப் பணி தற்போது ஏப்ரல் 1 முதல் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஷியாம் பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டாா். 
இதுகுறித்து அவர் கூறுகையில், இலவச கரோனா தடுப்பூசியை ஏற்படுத்திக்கொடுத்த பிரமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி. நம் நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 
தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments