முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 1 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

இந்தியாவில் முதல் முறையாக தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

இந்தியாவில் முதல் முறையாக தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது, இந்த ஆண்டில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 ணி நேரத்தில் புதிதாக 1,03,558 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,25,89,067 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் கரோனா தொற்றுக்கு மேலும் 478 போ் பலியாகினா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,65,101 -ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுதும் 7,41,830 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவிலிருந்து இன்று 52,847 பேர் குணமடைந்தனர். 
இதுவரை 1,16,82,136 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 24.90 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரேநாளில் நேற்று மட்டும் 8.93 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகளவில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இந்தியா 3ஆவது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 
இதன்படி அமெரிக்காவில் 36 ஆயிரம், பிரேசிலில் 31 ஆயிரம் பாதிப்பு பதிவான நிலையல் இந்தியாவில் 1.03 லட்சம் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments