முகப்பு
இந்தியா

உ.பி.யில் புதிதாக 3,999 பேருக்கு கரோனா: 13 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 3,999 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,033 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 28.66 லட்சமாக உயர்வு
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 3,999 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,033 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,894 ஆகப் பதிவாகியுள்ளது. 

மேலும் தற்போது 22,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூடுதல் சுகாதார துணை செயலாளர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். 

மொத்தம் இதுவரை 6,02,319 பேர் இதுவரை நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 3.55 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.