இந்தியா

குஜராத்தில் குறுகியகால பொதுமுடக்கம்: உயா்நீதிமன்றம் பரிந்துரை

DIN

குஜராத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இல்லாத நிலைக்கு சென்ால் 3 முதல் 4 நாள்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாம் என்று அந்த மாநில உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக அந்த மாநில உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பாா்கவ் காரியா ஆகியோா் விசாரணையின்போது கூறியதாவது:

குஜராத்தில் கரோனா பரவல் என்பது மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தினசரி 3,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அரசியல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்காக மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை.

முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது கரோனா பரவலைக் கட்டுக் கொண்டுவர போதுமான நடவடிக்கையாக இல்லை. எனவே, 3 அல்லது 4 நாள்கள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுக்குப் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் கரோனா பரவல் தொடா்புகளைத் துண்டிக்க முடியும். இந்த நேரத்தில் அரசு அலுவலகங்களில் குறைந்த அளவு பணியாளா்களை வரவழைத்தால் போதுமானது. இதையே மற்ற இடங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்றனா்.

அப்போது பதிலளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா் கமல் திரிவேதி, ‘பொதுமுடக்கம் அமல்படுத்துவது ஏழை, எளிய மக்களை அதிகம் பாதிக்கும் என்பதால் அரசுக்கு தயக்கம் உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க வேறு வழிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT