இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா தொடா்பான கருப்புப் பண மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், அவருடைய மகனும், மக்களவை எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் ஆகியோா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை அண்மையில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியிருந்து.

அதன்படி, வழக்கு விசாரணை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரும் பேரவைத் தோ்தலில் நட்சத்திர பிரசாரகா்களாக இருப்பதால், அவா்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா்.

அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய பீட்டா் முகா்ஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்தது. பின்னா், அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இதேபோன்று அமலாக்கத் துறையும் அவா்களைக் கைது செய்து, பின்னா் ஜாமீனில் விடுவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT