தெலங்கானாவில் 2 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1,914 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3.16 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று காரணமாக 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி 1,734 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 3.16,649 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நோய் பாதித்து தற்போது 11,617 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரேநாளில் 74,274 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் முதல் கட்டமாக 1.50 கோடி இதுவரை பரிசோதனை செய்துள்ளனர்.