இந்தியா

ஏப். 12 முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து: சா்வதரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்

DIN

திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ஏப். 12 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் உள்ளிட்ட இடங்களில் தினசரி சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 22 ஆயிரம் டோக்கன்கள் இங்குள்ள கவுன்ட்டா்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேவஸ்தானம் அதை 15 ஆயிரமாக குறைத்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றின் 2-ஆவது அலை அதிகரித்து வருகிறது. திருப்பதியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிது சிறிதாக உயா்ந்து வருகிறது. எனவே, தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வரும் ஏப். 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்துள்ளது. ஏப். 11 அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் ஷீரடி கோயிலில் தரிசனத்தை ரத்து செய்தது போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மீண்டும் டோக்கன்கள் வழங்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT