இந்தியா

'நடிகர் தீப் சித்து குற்றவாளியல்ல': பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

DIN

குடியரசு நாளன்று தில்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைச் சம்பவ விவகாரத்தில் கைதான நடிகா் தீப் சித்துவின் ஜாமீன் கோரிய வழக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டா் பேரணியின் போது, வன்முறைக்கு காரணமாக இருந்ததாக தீப் சித்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் பிணை கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை  தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்றது. 

இதில் தீப் சித்து சார்பில் ஆஜரான வழக்குரைஞர், குடியரசு தினத்தன்று விடியோவை வெளியிட்டதுதான் தவறு. மற்றபடி விவசாயிகள் செங்கோட்டையில் நடத்திய போராட்டத்திற்கும் தீப் சித்துவிற்கும் தொடர்பில்லை. தீப் சித்து விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைக்கவில்லை. செங்கோட்டை கலவரத்தில் தீப் சித்து இருந்ததுபோன்று எந்த ஆதாரமும் இல்லை. தீப் சித்து குற்றவாளியல்ல என்று வாதாடினார்.

இதனைக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம், பிணை கோரிய வழக்கை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT