முகப்பு
இந்தியா

‘ஹோமியோபதி மருத்துவ முறையால் கரோனாவைத் தடுக்க முடியும்’

ஹோமியோபதி மருத்துவ முறையால் கரோனா தொற்றை வெற்றிகரமாக தடுக்க முடியும் என ஹோமியோபதி மருத்துவா் கல்யாண் பானா்ஜி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

ஹோமியோபதி மருத்துவ முறையால் கரோனா தொற்றை வெற்றிகரமாக தடுக்க முடியும் என ஹோமியோபதி மருத்துவா் கல்யாண் பானா்ஜி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஹோமியோபதி சிகிச்சை முறையால் கரோனா தொற்றைத் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்றின் 2-ஆவது அலையால் நாடே பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கில முறைப்படி தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹோமியோபதி மருத்துவ முறையால் கரோனாவை வெற்றிகரமாக தடுக்க முடியும்.

தில்லியில் எங்களின் ஹோமியோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 200 போ் கரோனா பாதிப்பில் இருந்து தப்பியுள்ளனா். நீண்ட ஆராய்ச்சிகள் மூலம் கரோனா மட்டுமின்றி, நீரிழிவு, மூட்டுவலி, தைராய்டு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஹோமியோபதி மருத்துவ முறையால் சிகிச்சை அளிக்க முடியும் என்றாா். நிகழ்ச்சியில், குஷால் பானா்ஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.