முகப்பு
இந்தியா

பிகாரில் ஏப்.18 வரை பள்ளிகள் மூடல்

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 18ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக பிகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2021 at 8:22 PM
பிகாரில் ஏப்.18 வரை பள்ளிகள் மூடல்
பகிர்:

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 18ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக பிகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிகார் மாநிலத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கும் மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.