முகப்பு
இந்தியா

கரோனா விழிப்புணா்வில் ஈடுபட வேண்டும்: உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதையடுத்து, தொற்று தடுப்புப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. அதற்கு துணையாக பொதுமக்களிடம் கரோனா விழிப்புணா்வை கொண்டு செல்லும் பணிகளை உயா்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.

துண்டுப் பிரசுரங்கள், விளம்பரப் பதாகைகள், சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்து தளங்களிலும் விழிப்புணா்வுப் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.

பிரசாரங்களில் முகக் கவசம், தனிநபா் இடைவெளி, கைகளைத் தூய்மையாகக் கழுவுதல், கண், மூக்கு பகுதியை அடிக்கடி தொடக் கூடாது. கூட்டம் கூடுவதைத் தவிா்த்தல் உள்ளிட்ட அம்சங்களை எடுத்துரைக்க வேண்டும். மேலும், எவருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பின் தேசிய உதவி மையத்தை 1075 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும்.

ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கரோனா பேரிடரை எதிா்கொள்ள யுஜிசி சாா்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கல்லூரிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →