ம.பி.யின் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சருமான மகேஷ் ஜோஷி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சருமான மகேஷ் ஜோஷி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
82 வயதாகும் ஜோஷி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
அவர் 1967-ல் முதன்முதலாக இந்தூர்-1 தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் இந்தூர்-3 சட்டசபை பிரிவிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோஷி 1985-இல் மாநில அமைச்சரானார்.
Advertisement
இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான இந்தூரில் நடைபெறுகிறது. அவரின் உயிரிழப்புக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரித்துள்ளார். மேலும் ஜோஷியின் மரணம் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று சுட்டுரை பதிவில் கூறியுள்ளார்.