முகப்பு
இந்தியா

ஏப்ரல் இறுதிக்குள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டக்கூடும்: ம.பி. முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் இறுதிக்குள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டக்கூடும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். 

Updated On : 10 ஏப்ரல், 2021 at 3:41 PM
ஏப்ரல் இறுதிக்குள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டக்கூடும்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் இறுதிக்குள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டக்கூடும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 

Advertisement

கரோனா பரவைத் தடுக்கும் வகையில், பொது முடக்கம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளிக்கிழமை இரவு வரை மாநிலத்தில் செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30,486 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா வழக்குகள் அதிகரித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களைத் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும், ஒரு லட்சம் தடுப்பூசிகளைப் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது. வென்டிலேட்டர்களுக்கான ஏற்பாடுகளும் செய்து வருவதாக அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.