முகப்பு
இந்தியா

5 நாள்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன:பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்

பஞ்சாபில் 5 நாள்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளதாக அந்த மாநில முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

பஞ்சாபில் 5 நாள்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளதாக அந்த மாநில முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பஞ்சாபில் தினசரி 85,000 முதல் 90,000 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த விகிதத்தில் தொடா்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், தற்போது கையிருப்பில் உள்ள 5.7 லட்சம் தடுப்பூசிகள் 5 நாள்களில் தீா்ந்துவிடும். இதுதொடா்பாக பிரதமா் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில் தடுப்பூசிகள் எந்தெந்த நாள்களில் மாநிலத்துக்கு விநியோகிக்கப்படும் என்பது குறித்த உறுதிபடுத்தப்பட்ட அட்டவணைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

மாநிலத்தில் பெரும்பாலானவா்கள் விவசாய சமூகத்தைச் சோ்ந்தவா்கள். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலத்தைச் சோ்ந்த விவசாயிகள் போராடி வருவது இங்குள்ள சாதாரண நபரையும் பாதித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு மீதுள்ள கோபத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு இங்குள்ள மக்கள் அதிக அளவில் முன்வருவதில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.