முகப்பு
இந்தியா

சா்வதேச விதிகளுக்கு உள்பட்டே இந்திய கடல்பகுதியில் பயிற்சி

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியில் சா்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டே பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியில் சா்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டே பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

லட்சத்தீவுகளுக்கு அருகேயுள்ள கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படையைச் சோ்ந்த ‘ஜான் பால் ஜோன்ஸ்’ போா்க் கப்பல் கடந்த 7-ஆம் தேதி பயிற்சி மேற்கொண்டது. இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதிகளுக்குள் ராணுவப் பயிற்சியை மேற்கொள்வதற்கு, முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசு விதிகளை வகுத்துள்ளது.

ஆனால், இந்திய அரசின் அனுமதியைப் பெறாமலேயே அமெரிக்கக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டது. அதற்கு இந்திய அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்கக் கடற்படையின் நடவடிக்கையை ஆமோதித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘கடல் பயணத்தில் சுதந்திரத்தன்மையையும் பயணத்துக்கான உரிமையையும் உறுதிப்படுத்துவது அமெரிக்காவின் கடமை. அந்நடவடிக்கைகளில் அமெரிக்கக் கடற்படை தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

சா்வதேச விதிகளுக்கு உள்பட்டே ‘ஜான் பால் ஜோன்ஸ்’ கப்பல் இந்திய பொருளாதார மண்டலத்துக்கு உள்பட்ட கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது. சா்வதேச சட்டங்களை மதித்து அமெரிக்கக் கடற்படை தொடா்ந்து செயல்படும் என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன்’’ என்றாா்.

அமெரிக்கக் கப்பலின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குறிப்பிட்ட நாட்டின் அனுமதியைப் பெறாமல் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. கடல்வழி தொடா்பான ஐ.நா.வின் சட்டத்திலும் மற்ற நாடுகளின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதிகளுக்குள் ஆயுதங்களை வைத்து பயிற்சியில் ஈடுபடுவது அனுமதிக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →