முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்  பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
ஜம்மு-காஷ்மீர்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்  பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஷோபியான் மாவட்டம் ஹதிபோரா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 

இதில் சனிக்கிழமை ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

முன்னதாக, ஹதிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நுழைந்ததாக வந்த தகவலையடுத்து நேற்று பாதுகாப்புப்படையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் நேற்று ஒருவரில் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தொடர்ந்து ஹதிபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றநிலை நிலவுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →