இந்தியா

வங்கதேசத்தில் ஏப்.14 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை

IANS

வங்கதேசத்தில் ஏப்.14 முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை வங்கதேசத்துக்குச் செல்லும் அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக வங்க தேசத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தடை காரணமாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சிஏஏபி-யின் துணை மார்ஷல் ரஹ்மான் தெரிவித்தார். 

மேலும், மருத்துவ தேவைகள், நிவாரணம் மற்றும் சரக்கு விமானங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று விமான ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 3 முதல் ஐரோப்பா உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT