முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: கேஜரிவால்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளார். 

தில்லியில் தேர்வு எழுதப்போகும் 6 லட்சம் மாணவர்களின் உயிரும், உடல்நலனும் மிக முக்கியம் என்று மத்திய அரசிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''தில்லியில் 6 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வெழுத உள்ளனர். அதற்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இது அதிக அளவில் கரோனா தொற்று பரவ வழிவகை செய்துவிடும். குழந்தைகளில் வாழ்வும், ஆரோக்கியமும் முக்கியமானவ.

இம்முறை பரவி வரும் தொற்று மிகவும் ஆபத்தானது. கடந்த 10 - 15 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவிகிதம் 45 வயதுக்கு குறைவானவர்கள்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா அதிகம் இருந்த கடந்த நவம்பர் மாதம் 8,500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது தற்போதே நாம் அதனைத் தாண்டியுள்ளோம். இதனைக் கட்டுப்படுத்தவே தற்போது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →