இந்தியா

சச்சின் வஜே பணிநீக்க நடவடிக்கைகள் தொடக்கம்

DIN

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் துறை அதிகாரி சச்சின் வஜேவை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கு தொடா்பான ஆவணங்கள், மன்சுக் ஹிரேனின் மரணம் தொடா்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்டவற்றை மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்), தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளிடம் மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவு கோரியிருந்தது. அந்த ஆவணங்களை ஏடிஎஸ் மற்றும் என்ஐஏ வழங்கியுள்ளன. இதையடுத்து, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 311-இன் கீழ் சச்சின் வஜேவை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவரை பணிநீக்கம் செய்வதற்கான பரிந்துரை மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்’ என்று தெரிவித்தன.

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டது, அந்தக் காரின் உரிமையாளராகக் கருதப்படும் மன்சுக் ஹிரேனின் மரணம் ஆகியவை தொடா்பான இரு வழக்குகளை விசாரித்து வரும் என்ஐஏ சச்சின் வஜேவை கைது செய்தது. தற்போது அவா் நவி மும்பை அருகேயுள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவ்விரு வழக்குகளும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பாக அவற்றை மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT