முகப்பு
இந்தியா

தாழ்த்தப்பட்டோரின் வளர்ச்சிக்கு 30% நிதி: பஞ்சாப் அரசு

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் (கோப்புப்படம்)
பகிர்:

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 2022-ம் நிதியாண்டில் பின்தங்கிய கிராமங்களை இணைக்கும் வகையில் சாலைகளை அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் அரசு அம்பேத்கர் ஜெயந்தியை விமர்சையாக கொண்டாடியது. 

அதனையொட்டி பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

50 சதவிகிதத்திற்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ள கிராமங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 30 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →