இந்தியா

'பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது’: மம்தா பானர்ஜி

DIN

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது என அம்மாநில முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 135 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 5ஆம் கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் தப்கிராம்-ஃபுல்பாரியில் நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதைக் குறிப்பிட்டு, “பாஜக நடந்து முடிந்த 135 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவில் 100க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என பிரதமர் பேசியிருக்கிறார். 294 தொகுதிகளுக்குமான தேர்தல் நிறைவடைந்தாலும் பாஜகவால் 70 தொகுதிகளைக் கூட வெல்ல முடியாது” என அவர் தெரிவித்தார். 

மேலும் கரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்துவரும் பாஜக மேற்குவங்கத்தில் தொற்று பரவலை ஏற்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டு பேசினார். 

திரிணமூல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என மம்தா உறுதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT