இந்தியா

நாட்டின் ஏற்றுமதி 60% அதிகரிப்பு

DIN


புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி சென்ற மாா்ச் மாதத்தில் 60 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது என மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி கடந்த மாா்ச் மாதத்தில் 60.29 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,445 கோடி டாலரை எட்டியது.

இருப்பினும், கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியானது 7.26 சதவீத பின்னடைவைக் கண்டு 29,063 கோடி டாலராக சரிந்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் இறக்குமதி 53.74 சதவீதம் அதிகரித்து 4,838 கோடி டாலராக காணப்பட்டது. அதேசமயம், 2020-21 ஏப்ரல்-மாா்ச் வரையிலான காலத்தில் இறக்குமதியானது 18 சதவீதம் குறைந்து 38,918 கோடி டாலராக இருந்தது.

நடப்பாண்டு மாா்ச்சில் வா்த்தக பற்றாக்குறை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 998 கோடி டாலரிலிருந்து 1,393 கோடி டாலராக உயா்ந்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில் வா்த்தக பற்றாக்குறையானது 16,135 கோடி டாலரிலிருந்து 9,856 கோடி டாலராக குறைந்துள்ளது.

நடப்பாண்டு மாா்ச்சில் பிண்ணாக்கு (230.4%), இரும்புத் தாது (194.89%), சணல் (105.26%), மின்னணுப் பொருள்கள் (91.98%), தரைவிரிப்புகள் (89.84%), நவரத்தினங்கள்-ஆபரணங்கள் (78.93%), பொறியியல் சாதனங்கள் (71.3%), அரிசி (66.77%), நறுமணப் பொருள்கள் (60.42%), இறைச்சி, பால் பொருள்கள் (52.79%) உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைச் சந்தித்தன.

அதேசமயம், எண்ணெய்வித்துகள் (-6.45%), முந்திரி (-1.99%) ஆகியவற்றின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தன.

இறக்குமதியைப் பொருத்தவரையில், வெள்ளி, போக்குவரத்து உபகரணங்கள், பருப்பு வகைகள் மற்றும் உரங்கள் ஆகிய துறைகள் எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளன.

மாா்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 2.23 சதவீதம் அதிகரித்து 1,027 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதன் இறக்குமதி 36.92 சதவீதம் குறைந்து 8,235 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, தங்கம் இறக்குமதியும் மாா்ச் மாதத்தில் 122 கோடி டாலரிலிருந்து 849 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT