முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 5,086 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் ஒரேநாளில் 5,086 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
ஆந்திரத்தில் மேலும் 5,086 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

ஆந்திரத்தில் ஒரேநாளில் 5,086 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திரத்தில் ஒரேநாளில் 5,086 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,42,135ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 7,353ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 1,745 பேர் குணமடைந்தனர். 

இதுவைரை 9,03,072 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 31,710 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.