முகப்பு
இந்தியா

அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கௌருக்கு கரோனா

சிரோமணி அகாலிதள எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாடலுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கவுருக்கு கரோனா
பகிர்:

சிரோமணி அகாலிதள எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாடலுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில், 

கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் உள்ள நிலையில், என்  வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.

சமீபத்தில் என்னுடன் தொடர்புகொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார். 

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 2.17 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.