முகப்பு
இந்தியா

தில்லி: கரோனா மேலாண்மைப் பொறுப்பு அமைச்சராக மணீஷ் சிசோடியா நியமனம்

கரோனாவைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட கரோனா மேலாண்மைப் பொறுப்பு,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
மணீஷ் சிசோடியா
பகிர்:

கரோனாவைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா மேலாண்மை பொறுப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தில்லியில் கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு என தில்லி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் கோவிட்-19 மேலாண்மைக்கான பொறுப்பு அமைச்சராக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செயல்படுவார் என்று தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பையும், அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் அவர் ஏற்கிறார். 

இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க தில்லியில் முதல்வர் கேஜரிவால் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →