முகப்பு
இந்தியா

'அனைவருக்கும் இது சிக்கலான நேரம்; பாதுகாப்பாக இருங்கள்' - பிரியங்கா காந்தி

நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)
பகிர்:

நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

என் அன்பு நாட்டு மக்களே, நம் அனைவருக்கும் இது மிகவும் சிக்கலான காலம். நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பலரும்  கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

Advertisement

எனவே, கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எச்சரிக்கையுடனும், இரக்கத்துடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கரோனா போரில் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார். 

நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 2,17,353 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரேநாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது நாடு முழுவதும் 15,69,743 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments