முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 4 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா தினசரி பாதிப்பு 

தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பு 3,840 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பு 3,840 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,17,353  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 1185 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பு 4  ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,840 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,885 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,797 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கரோனாவிலிருந்து இன்று 1198 பேர் குணமடைந்தனர். இதுவரை 3,09,594  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments