முகப்பு
இந்தியா

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நான் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

கவலைப்பட வேண்டாம், இது உங்கள் பிரச்னைகளை தீர்க்க எனக்கு போதுமான நேரம் தருகிறது. 

உங்களுன்தான் நான் எப்போதும் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments