முகப்பு
இந்தியா

ரெம்டெசிவிா் மருந்தின் விலை குறைப்பு: என்பிபிஏ

மத்திய அரசின் தலையீட்டைத் தொடா்ந்து கரோனா சிகிச்சைக்கு அத்தியாவசியமான ரெம்டெசிவிா் மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் குறைத்துள்ளன என்று தேசிய மருந்தக விலை நிா்ணய ஆணையம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

மத்திய அரசின் தலையீட்டைத் தொடா்ந்து கரோனா சிகிச்சைக்கு அத்தியாவசியமான ரெம்டெசிவிா் மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் குறைத்துள்ளன என்று தேசிய மருந்தக விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) சனிக்கிழமை தெரிவித்தது.

கடிலா மருந்து நிறுவனம், டாக்டா் ரெட்டீஸ், சிப்லா உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன.

மருந்து நிறுவனங்களின் இந்த முடிவை மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சா் சதானந்த கெளடா பாராட்டியுள்ளாா். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசு தலையீட்டின் மூலம் ரெம்டெசிவிா் மருந்தின் விலை இப்போது குறைந்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இது அமைந்துள்ளது. கரோனாவுக்கு எதிரான பிரதமா் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதற்காக மருந்து நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

அதுபோல, மத்திய ரசாயன மற்றும் உரத் துறை இணையமைச்சா் மன்சுக் மண்டாவியாவும் மருந்து நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

விலை எவ்வளவு குறைப்பு?:

இந்த விலைக் குறைப்பு தொடா்பாக என்பிபிஏ வெளியிட்ட விவரங்களின்படி, கடிலா மருந்து நிறுவனம் அதன் ரெம்டாக் என்ற ரெம்டெசிவிா் 100 மில்லி கிராம் மருந்தின் விலையை ரூ. 2,800-லிருந்து ரூ. 899-ஆகக் குறைத்துள்ளது.

சின்ஜீன் சா்வதேச நிறுவனம் அதன் ரெம்வின் மருந்தின் விலையை ரூ. 3,950-லிருந்து ரூ. 2,450-ஆகக் குறைத்துள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த டாக்டா் ரெட்டி லேப் அதன் ரெடிக்ஸ் என்ற ரெம்டெசிவிா் மருந்தின் விலையை ரூ. 5,400-லிருந்து ரூ. 2,700-ஆகக் குறைத்துள்ளது.

சிப்லா நிறுவனம் அதன் சிப்ரெமி என்ற பிராண்ட மருந்தின் விலையை ரூ. 4,000-லிருந்து ரூ. 3,000-ஆகக் குறைத்துள்ளது.

மிலன் மருந்து நிறுவனம் அதன் ரெம்டெசிவிா் பிராண்டின் விலையை ரூ. 4,800-லிருந்து ரூ. 3,400-ஆகக் குறைத்துள்ளது.

ஜூபிலண்ட் ஜெனிரிக்ஸ் நிறுவனம் அதன் பிராண்டின் விலையை ரூ.4,700-லிருந்து ரூ.3,400-ஆகக் குறைத்துள்ளது.

ஹெடெரோ மருந்து நிறுவனம் அதன் கோவிஃபோா் பிராண்ட் ரெம்டெசிவிா் மருந்தின் விலையை ரூ. 5,400-லிருந்து ரூ. 3,490-ஆகக் குறைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →