தில்லியில் படுக்கைகளுக்கும், ஆக்ஸிஜனுக்கும் பற்றாக்குறை: மோடிக்கு கேஜரிவால் கடிதம்
தில்லியில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசிடம் உதவி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லியில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசிடம் உதவி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 30 சதவிகிதத்தைத் தொட்டுள்ள நிலையில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
Advertisement
"கரோனா சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளிலும் கரோனா நோயாளிகளே உள்ளனர். எங்களால் முடிந்தவற்றை நாங்கள் முயற்சிக்கிறோம். உங்களிடம் உதவி கோருகிறோம்."
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் 500 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. அந்த 500 படுக்கைகளை 1,000 படுக்கைகளாக உயர்த்த வேண்டும்.
மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் 10,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 1,800 படுக்கைகள் மட்டுமே கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தில்லியில் தற்போது நிலவும் சூழல்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 7,000 படுக்கைகளைக் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."