இந்தியா

லக்னௌவில் 30 சதவீத சுகாதார ஊழியர்களுக்கு கரோனா

IANS

லக்னௌவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் கரோனா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரேநாளில் 40 மருத்துவர்கள் கரோனாவுக்கு பாதிக்கப்படுவதாக கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு குழு 14 நாள்கள் கரோனா வார்டுக்கு செல்லும்போதும், அவர்களில் நான்கில் ஒரு குழுவினர் மட்டுமே திரும்ப வருகின்றனர். 

அவர்களில் பலர் வீட்டில் தனிமைப்படுத்துதலிலும், சிலர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 30 சதவீத  ஊழியர்கள் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், பால்ராம்பூர் மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 15 மருத்துவர்கள் உள்பட 24 ஊழியர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று நோடல் அதிகாரி டாக்டர் வி கே பாண்டே கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT