முகப்பு
இந்தியா

கரோனா பரவல்: மருத்துவர்களுடன் பிரதமர் ஆலோசனை

கரோனா பரவல் குறித்து நாட்டின் முக்கிய மருத்துவர் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பரவல் குறித்து நாட்டின் முக்கிய மருத்துவர் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதில் கரோனா பரவி வரும் வேகம், கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவம் அளிக்க வேண்டிய முறைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

நாட்டில் நிலவும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை, தடுப்பூசி திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →